மாவட்டம் விட்டு மாவட்ட பணியிட மாறுதல் : வருவாய் துறை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்..

லோக் சபா தேர்தலையொட்டி 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு ஊழியர்களை பணியிட மாறுதல் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள இதன்படி ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள் கடந்த சில வாரங்களாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

மேலும் பல்வேறு துறை அரசு பணியாளர்கள் பணியிட மாறுதல் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வருவாய் வட்டாட்சியர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட பணியிட மாறுதல் உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் தாசில்தார்கள் பணியிட மாற்றத்தை ரத்து செய்யக் கோரி ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலக உதவியாளர்கள் முதல் தாசில்தார்கள் மற்றும் வருவாய் துறை பணியாளர்கள் (248 பெண்கள் உள்பட 527 பேர்) பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணியிட மாறுதலை ரத்து செய்யாவிடில், தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்க மாநில மைய முடிவின்படி மார்ச் 4 ஆம் தேதி முதல் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.