மதுரையில் இருந்து மும்பைக்கு நேரடியாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பயண சேவை துவங்கியது. மும்பையிலிருந்து 98 பயணிகளும் மதுரையிலிருந்து மும்பைக்கு 102 பயணிகளும் பயணம் செய்தனர். மதுரை விமான நிலையத்தில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு செல்லும் புதிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு மதுரை விமான நிலையத்தில் தண்ணீர் பீச்சி உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
மேலும் விமான சேவை துவக்கிய ஏர் இந்தியா மதுரை நிலைய அலுவலர் ஆனந்த் ராஜ் மற்றும் மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார், மதுரை விமான நிலைய முதன்மை பாதுகாப்பு அலுவலர் கருப்பசாமி, மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆய்வாளர் கமல் சிங் ஆகியோர் புதிய விமான சேவையை வரவேற்கும் விதமாக மதுரை விமான நிலையத்தில் கேக் கொண்டாடினர்.
மும்பையில் இருந்து மதுரை வந்த விமானத்தில் 98 பயணிகளும் மதுரையில் இருந்து மும்பை செல்லும் விமானத்தில் 102 பயணிகளும் பயணம் செய்தனர். முன்னதாக மும்பை சென்னை மதுரை வழியாக விமான சேவை இயக்கப்பட்டு வந்தது இன்று முதல் மதுரை மும்பை விமான நேரடி சேவை தொடர்கிறது..
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.