உசிலம்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பாலை நடுரோட்டில் ஊற்றி ஆர்ப்பாட்டம்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் அருகில் உசிலம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பசும்பால் லிட்டருக்கு 35ரூபாயாக உயர்த்தி வழங்கிடு, மாட்டுத்தீவனம் 50 சதவிகிதம் மானியத்தில் வழங்கிடு, குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தில் ஆவின் பாலையும் சேர்த்து வழங்கிடு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பசும்பாலை நடுரோட்டில் ஊற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு பரிந்துரை செய்யவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் நடத்துவோம் என்றனர். இந்த ஆர்ப்பாட்டம் மாநில செயலாளர் முகமது அலி தலைமையில் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.