இராமேஸ்வரத்தில் 25.01.2019ல் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம்..

இராமேஸ்வரம் நகர் திமுக சார்பில் 25.01.2019 (வெள்ளி கிழமை) அன்று மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள், பொங்கல் விழா கிராமிய கலை நிகழ்ச்சி மற்றும் பொதுக் கூட்டம் என் எஸ் கே வீதியில் மாலை 5:00 மணி முதல் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கழக தீர்மானக்குழு தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன்.முத்துராமலிங்கம், உயர் நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சுப.தங்கவேலன், மாவட்ட கழக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர் நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். நகர் திமுக., செயலாளர் கே.இ.நாசர் கான் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்துள்ளார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்