ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருடன் சங்கரன்கோவில் ஊராட்சி செயலர்கள் சங்கத்தினர் சந்திப்பு..

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருடன் சங்கரன்கோவில் ஊராட்சி செயலர்கள் சங்கத்தினர் சந்திப்பு. சங்கரன் கோவில் பகுதியில் ஊராட்சி செயலருக்கு பதிவுரு எழுத்தர் நிலைக்கான அரசாணை (அரசாணை எண்.171 நாள்.29.11. 18 ) வழங்கப்பட்டது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும்,  மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் வகையிலும் சங்கரன் கோவில் ஊராட்சி செயலர்கள் சங்கம் சார்பில் மாண்புமிகு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் திருமதி வி.எம்.ராஜலட்சுமி அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்த நிகழ்வு 31.12.18 இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஊராட்சி செயலர் சங்க மாவட்ட பொருளாளர் திரு.இ.முருகன், செய்தி தொடர்பாளர் திரு.மு.குமார், வீரசிகாமணி ஊராட்சி செயலர் திரு.லட்சுமணன் மற்றும் ஏனைய ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டு மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

செய்தியாளர்; அபுபக்கர்சித்திக்

#Paid Promotion