
இராமநாதபுரம் மாவட்டம் எக்ககுடியில் ஞாயிற்றுக்கிழமைMugavai Educational & Empowerment Trust (MEET) மற்றும் எக்ககுடி முஸ்லிம் வாலிபர் சங்கம் இணைந்து நடத்திய அரசு போட்டித் தேர்வுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி (8-11-2020) அன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு முகவை எஜுகேஷன் என்பவர்மென்ட் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் Er.M.ஹமீது சாலிஹ் தலைமை வகித்தார்கள், எக்ககுடி இமாம் முகம்மது ஜரித் அன்வாரி அவர்கள் கிராத் ஓதி ஆரம்பித்து வரவேற்புரை நிகழ்த்தினார். எக்ககுடி முஸ்லிம் ஜமாஅத் தலைவர் நூர்முஹம்மது ஹாஜியார், ஜமாத் செயலாளர் அஸ்கர் அலி, ஊராட்சிமன்றத் தலைவர் அக்பர் அலி, முஸ்லிம் வாலிபர் சங்கம் தலைவர் காசிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் முகவை எஜூகேஷன் எம்பவர்மெண்ட் டிரஸ்ட் பயிற்சியாளர்கள் நபில் BCA, BA,ECO; மற்றும் முஹம்மது இப்ராஹிம். M.COM,CA,MBA அரசு வேலைவாய்ப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சிறப்பு அழைப்பாளராக கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜவஹர் பாருக் MA; M.PHIL கலந்துகொண்டு அரசு போட்டித் தேர்வை எதிர்கொள்வது எப்படி என்று மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார். இறுதியாக வழக்கறிஞர் சாகுல் ஹமீது நன்றியுரை கூறி இனிதே நிகழ்ச்சி முடிவடைந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.
இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முகவை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தி வருவது குறிப்பிடதக்கது. மேலும் பிற பகுதிகளிலும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்ய Mugavai Education & Empowerment Trust (MEET) நிர்வாகிகளை 95007 82122, 90877 89367, 89039 04606 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
You must be logged in to post a comment.