விபத்து உண்டாக்கும் வகையில் இருந்த கருவேல மரத்தை நீக்கி சாலையை சரி செய்த வண்ணாங்குண்டு லஜ்னத்துல் இர்ஷாத் இளைஞர் நற்பணி மன்றம்..

வண்ணாங்குண்டில் இருந்து மேதலோடை செல்லும் தார்சாலையின் ஓரங்களில் கருவேல மரங்கள் படர்ந்து இருந்ததால் அவ்வழியாக வரும் வாகனங்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி, விபத்துக்குள்ளாகும் நிலை உருவாகியது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் உடனடியாக களத்தில் இறங்கிய வண்ணாங்குண்டு லஜ்னத்துல் இர்ஷாத் இளைஞர் நற்பணி மன்றத்தின் இளைஞர்கள் உடனடியாக கருவேல மரங்களை அகற்றி சாலையை சீர்படுத்தினர்.

செய்தி:- வண்ணை SH Basith துபாய்., கீழை நியூஸ் வெளிநாட்டு செய்தியாளர்.