
வரும் நவம்பர் 14, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மரம் வளர்ப்போம், வனங்களை பாதுகாப்போம் என்ற நோக்கத்துடன் நாட்டு காய்கறி விதைகள் அடங்கிய பேப்பர் விதைப்பென்சில், துணிப்பைகளை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதுரை மண்ணின் மைந்தர்கள் நிறுவனர் G.K.அழகுராஜா வழங்கினார்.
பென்சில் விதைகளை விதைத்து, பராமரிப்பு செய்து வளர்க்கும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. பென்சில் விதைகளை பற்றி விளக்கும் பொழுது’ குறும்பயிர்களான தக்காளி, பச்சை மிளகாய், பூசணி, அவரை உள்ளிட்ட பல்வேறு காய் மற்றும் பழங்களின் விதைகள் இந்த பென்சிலின் மறுமுனையில் உள்ள மூடி போன்ற அமைப்பில் அடைக்கப்பட்டுள்ளன. இந்த பென்சிலை பயன்படுத்திய பின்னர் வீசி செல்லும்போது அதன் கேப்சூல் வடிவிலான முனை வழியாக செடிகள் வளரும் என வலியுறுத்தப்பட்டது.
சிறந்த முறையில் பயிர் வளர்க்கும் மாணவ, மாணவிகளுக்கு இதன் மூலம் பரிசுகளையும் அறிவித்து வழங்க உள்ளதால் ஆர்வத்துடன் மாணவர்கள் விதை பென்சில்களை பெற்று சென்றனர். இந்த நிகழ்வில் நிர்வாகிகள் ரதி, பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.