58
கோவில்பட்டி அருகேயுள்ள மந்திதோப்பு ராஜகோபால் நகரில் உள்ள நரிக்குறவர் காலனியில் உள்ள மக்கள் பயன் பெறும் வகையிலும், பருவ கால மாற்றத்தினால் ஏற்படும் நோய்களில் இருந்து காக்கும் விதமாக கோவில்பட்டி நல்ல சமாரியன் கிளப் என்ற அமைப்பு சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் மருத்துவர்கள் சின்னச்சாமி பிரபாகரன்,பிரபு, ராஜேஸ்வரி, ஆனந்த் மற்றும் நல்ல சமாரியன் கிளப் தலைவர் மருத்துவர் பிரேம்சிங் தலைமையிலான குழுவினர்கள் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என அனைவருக்கும் பல விதமான நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டன. இதில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
You must be logged in to post a comment.