Home செய்திகள் பொதுமக்களின் வசதிக்காக தமிழக காவல்துறையின் புதிய இணையதள சேவைகள்

பொதுமக்களின் வசதிக்காக தமிழக காவல்துறையின் புதிய இணையதள சேவைகள்

by mohan

பொதுமக்கள் சேவையை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு காவல்துறையின் இணையதளம் (http://eservices.tnpolice.gov.in) மூலம் இரண்டு புதிய இணையதள வசதிகளை தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கிற்கு தொடர்பான ஆவணங்களை விரைவில் பெரும் வசதி மற்றும் தொலைந்து போன அசல் ஆவணங்கள் பற்றிய புகார் அளிக்கும் வசதி.பாதிப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாலை விபத்துக்கள் தொடர்பான வழக்கிற்கு தேவையான ஆவணங்களை இணையதளத்தில் பகிர்தல்.சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது இழப்பீட்டு தொகையை விரைவாக பெற்றுக்கொள்ள வசதியாக இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாலை விபத்தில் இறந்தவர்களின் சட்ட பிரதிநிதிகள் இந்த வசதியின் மூலம் ஆவணங்களை பெறலாம். புலன் விசாரணையின் போது காவல்துறையில்பதிவுசெய்யப்பட்ட அவர்களது மொபைல் எண்களை அடிப்படையாகக் கொண்டு பயனீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். நெட் பேங்க் வசதியை பயன்படுத்தி ரூ.10/- ஒரு ஆவணதிற்கு செலுத்தி ஆவணங்களை பெற்றுக்கொள்ளலாம். கூடுதலாக பதிவிறக்கம் செய்த ஆவணத்தின் நகலானது பயனீட்டாளரின் மின்னஞ்சல் கணக்கிற்கு அனுப்பப்படும். தொலைந்து போன ஆவண அறிக்கை (LDR) சில ஆவணங்கள் தொலைந்தது குறித்து அறிக்கை செய்வதற்காக ஆன்லைன் வசதியும் காவல் இணையத்தளத்தின் ஊடக குடிமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் பாஸ்போர்ட், வாகன பதிவு சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் தொலைந்து போனது பற்றி காவல்துறையில் புகார் அளித்து ஒப்புதல் பெறும் செய்முறையும் எளிமையாக்கப்பட்டுள்ளது. பயனீட்டாளரின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் OTP அடிப்படையில் அங்கீகாரம் உறுதி செய்யப்படும். ஆதார் கார்டு , பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் , வாக்காளர் அடையாள அட்டை போன்ற அரசால் வழங்கப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்யவேண்டும். தேவையான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், தொலைந்த ஆவண அறிக்கை (LDR) ஒரு தனித்துவமான குறிப்பு எண்ணுடன் உடனடியாக பயனீட்டாளாருக்கு அளிக்கப்படும். அதே சமயத்தில், இந்த அறிக்கையின் நகலை அவரின் மின்னஞ்சல் கணக்கிற்கு உடனுக்குடன் அனுப்பப்படும். ஆவணம் வழங்கும் அதிகாரிகளால் LDR ன் உண்மைத்தன்மையை சரிபார்க்க இணையதளத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!