Home செய்திகள் மதுரையில் தொடர்ந்து 365 வது நாட்களாக தெருவோர ஏழைகளுக்கு உணவு வழங்கும் மதுரையின் அட்சயப் பாத்திரம் டிரஸ்ட்.

மதுரையில் தொடர்ந்து 365 வது நாட்களாக தெருவோர ஏழைகளுக்கு உணவு வழங்கும் மதுரையின் அட்சயப் பாத்திரம் டிரஸ்ட்.

by mohan

மதுரையில் சாலையோர வீடு அற்ற ஏழைகள் மற்றும் ரோட்டோரத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் பசித்தவர்களுக்கு சமூக ஆர்வலர் நெல்லை பாலு மதுரையின் அட்சயபாத்திரம் டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் மதிய உணவினை வழங்கி வருகிறார்,அதனை இன்று வரை எந்த வித எதிர்ப்பார்ப்பு இன்றி ஏழைகளுக்கு,நோயாளிகளுக்கும், உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறார்,கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தளர்வுகள் அறிவித்த பின்பும் இன்று வரை தினமும் மதியம் சுவையான உணவு வகைகளை சாலையோரம், நடைபாதையில் உள்ள முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உணவு பொட்டலங்கள் பெற்று வருகின்றனர்அரசு ராஜாஜி பொது மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் பார்வையாளர்களை தேடி சென்று நேரடியாக உணவுகளை வழங்கி வருகிறார்,நாள் ஒன்றுக்கு தினமும் 300 நபர்களுக்கு உணவு பார்சலில் கொடுத்து மகிழ்கிறார் நெல்லை பாலு என்ற சமூக ஆர்வலர்,அதனை 356 நாளாக, அதாவது ஒரு வருடம் முழுவதுமாக இடைவெளி இன்றி உணவுகளை பசித்த ஏழைகளுக்கு வழங்கிவருகிறார்பசித்தவர்களுக்கு உணவு வழங்கும் இத்திட்டத்தின் 365 நாள் நிகழ்ச்சி மதுரை ராஜாஜி மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவான தலைக்காயம் விபத்துப் பகுதியில் காயங்களுடன் சிசிச்சை பெற்று வரும் நோயாளிகளின் பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவினை இன்று வழங்கினார்இதில் திரைப்பட நகைச்சுவை நடிகர் வையாபுரி பங்கேற்று உணவினை வழங்கினார் மதுரை மங்கையர்க்கரசி மில்ஸ், சேர்மன் கண்ணப்ப செட்டியார்,சாஸ்தா அப்பளம் உரிமையாளர் மணிகண்டன்,மதுரை கிழக்கு ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் பிரபுகார்த்திக்கேயன், செயலாளர்,ஜெகன்,ஆகியோருடன் அட்சய பாத்திர சேர்மன் நெல்லை பாலு கலந்து கொண்டு வழங்கினார்கள்.ரோட்டோரத்தில் உள்ள வறியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ச்சியாக 365 நாளாக உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வரும் அதன் சேர்மன் நெல்லை பாலுவை பொதுமக்கள் பாராட்டினர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!