பொருநை நெல்லை புத்தக கண்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்வாக நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். பயிற்சி வகுப்பின் முதல் நாளான 17.03.2022 வியாழக்கிழமை க்ரையான்ஸ் ஓவிய பயிற்சி நடத்தப்பட்டது. இந்த ஓவிய பயிற்சியினை சபாநாயகர் மு அப்பாவு துவங்கி வைத்தார். இப் பயிற்சியினை சேரன் கவின் கலைக் கழகம் சிவராமகிருஷ்ணன் மற்றும் வீராசாமி ஆகியோர் நடத்தினர். புனித இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பயிற்சி வகுப்பின் இரண்டாம் நாளான 18.03.2022 வெள்ளிக்கிழமை காகிதக் கலை பயிற்சி நடத்தப்பட்டது. வண்ண தாள்கள் கொண்டு அழகிய கலைப் பொருட்கள் தயாரிக்கும் இந்த பயிற்சியினை வருவாய் அலுவலர் சுகன்யா அவர்கள் துவங்கி வைத்தார். இப் பயிற்சியினை கலையாசிரியர் சொர்ணம் நடத்தினார். சாராள் தக்கர் ஆசிரியர் பயிற்சி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.மேலும் தொடர்ந்து பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது. இன்று பனை ஓலை கொண்டு கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சியில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.