Home செய்திகள் மழை நீரால் மாவிலிபட்டி கிராமத்திற்கு செல்லும் சாலை மூழ்கியது., பேருந்து வராததால் 2 கிலோ மீட்டர் தூரத்திற்க்கு நடந்து செல்லும் மாணவர்கள்.

மழை நீரால் மாவிலிபட்டி கிராமத்திற்கு செல்லும் சாலை மூழ்கியது., பேருந்து வராததால் 2 கிலோ மீட்டர் தூரத்திற்க்கு நடந்து செல்லும் மாணவர்கள்.

by mohan

மதுரை திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட தென்பலஞ்சி அருகே உள்ள மாவிலிபட்டி கிராமத்தில்., தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் அருகில் உள்ள தென்பழஞ்சி கிராமத்தின் கண்மாய்க்கு நீர் வரத்து அதிகமாக உள்ளதால் தென்பழஞ்சி கிராம கண்மாய் நிரம்பி வருகிறது.இதனால் திருப்பரங்குன்றத்திலிருந்து மாவிலிபட்டி கிராமத்திற்கு செல்ல தென்பழஞ்சி கிராம சாலையை பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த சாலையானது தென்பழஞ்சி கண்மாயை ஒட்டியுள்ளதால்., இந்த சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 20 ஏக்கருக்கு அதிகமான விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் இந்த சாலையில் இருபுறமும் தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்ய பட்டுள்ளது.மாவிலிபட்டி கிராம மக்கள் இந்த சாலை வழியாகத்தான் மதுரைக்கு செல்ல திருப்பரங்குன்றம், பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி, சிம்மக்கல், பழம்மார்க்கெட், காய்கறி சந்தை, திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்றடைய முடியும். மேலும்., இங்குள்ள 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திருநகர் மற்றும் திருப்பரங்குன்றம் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.இவர்கள் அரசுப்பேருந்து மூலம் பள்ளி சென்று திரும்பும் நிலையில் இந்த தென் பகுதி வழியாக மாவிலிபட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் தண்ணீர் மூழ்கியுள்ளதால் அரசுப்பேருந்து தற்போது மாவிலிபட்டிக்கு முன்பு உள்ள தென்பழஞ்சி வரை மட்டுமே இயக்கப்படுவதால் இந்த கிராமத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் காலை, மாலை இரு வேளையும் மாவிலிபட்டி கிராமத்திலிருந்து தென்பழஞ்சி வரை 2 கிலோ மீட்டர் தூரம் தண்ணீரில் ஆபத்தான முறையில் நடந்து சென்று பள்ளி சென்று திரும்புகின்றனர்.இப்பகுதி மக்கள் வியாபாரிகள் விவசாயிகள் மருத்துமனைக்கு செல்லும் நபர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் ஆகியோர் மாவிலிபட்டி கிராமத்திற்கு பாதுகாப்பான முறையில் கடந்துசெல்ல மாற்று ஏற்பாட்டை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் மாற்றுப்பாதையில் பேருந்து இயக்கப்பட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!