Home செய்திகள் பிறப்பு முதல் இறப்பு வரை அரசு மருத்துவமனை லஞ்சம் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது.

பிறப்பு முதல் இறப்பு வரை அரசு மருத்துவமனை லஞ்சம் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது.

by mohan

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினசரி மதுரை திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் விபத்து மற்றும் பிரசவம் மற்றும் உயிர்காக்கும் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெரும்பாலும் ஏழை நடுத்தர மக்கள்கள் நம்பி உள்ளனர் தற்பொழுது சமீபகாலமாக மருத்துவமனையில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் பணம் கொடுத்தால்தான் வேலை இன்று நிலைமை மாறிவிட்டது ஆண் குழந்தை பிறந்தால் 1000 ரூபாய் பெண் குழந்தை பிறந்தால் 500 என கொடுத்தால்தான் குழந்தையாகவே உறவினர்கள் பார்க்க கூடிய சூழ்நிலை உள்ளது என குற்றச்சாட்டு எழுகிறது மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மாவுக்கட்டு போட 100 முதல் 300 வரை வசூல் வேட்டை நடத்துகின்றனர் இந்த நிலையில் தற்போது இணையத்தில் விபத்தில் காயமடைந்த நபர் ஒருவருக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை புதிய கட்டிடத்தில் செயல்படும் எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது இதில் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நபருக்கு மாவுகட்டு போடுவதற்காக சென்றுள்ளனர் அப்பொழுது அங்கு பணியில் உள்ள ஊழியர் பணம் கொடுத்தால்தான் கட்டு போட முடியும் என கூறியுள்ளார் இதைக்கண்டு அதிர்ந்த அவர் ரகசியமாக வீடியோ பதிவு எடுத்துள்ளார் இது தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது இவர் மாதம் வாங்கும் சம்பளத்தை விட வாங்கும் லஞ்சம் அதிகம் என பொதுமக்களும் நோயாளிகளும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதிக அளவு பணம் செலவழித்து மருத்துவம் பார்க்க முடியாத ஏழை மற்றும் நடுத்தர மக்களை அரசு மருத்துவமனையை நாடி வருகிறார்கள் குழந்தை பிறந்தால் லஞ்சம் பிரேத பரிசோதனையில் லஞ்சம் பிறப்பு முதல் இறப்பு வரை அரசு மருத்துவமனையில் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் என லஞ்சம் தலைவிரித்தாடும் கொடுத்தால்தான் பணி நடைபெறும் என்கின்ற பொழுது மனம் நொந்து வேறுவழியின்றி பணம் தரும் சூழ்நிலை ஏற்படுகிறது இது போன்ற நிகழ்வுகளை தடுக்க அரசு மருத்துவமனை நிர்வாகம் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராவை வைத்து லஞ்சத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் பணிநீக்கம் செய்ய வேண்டுமெனவும் வரும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் காக்க அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவமனை நிர்வாகம் குழு ஒன்று அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது நடவடிக்கை எடுப்பார்களா அரசு மருத்துவமனை நிர்வாகம் எதிர்பார்ப்புடன் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!