மதுரையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் கத்தியால் குத்திக் கொலை.

மதுரை சுப்ரமணியபுரம் பகுதியில் உள்ள ஹரிஜன காலனியை சேர்ந்த ராம சந்திரன் (வயது 28) என்பவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில் கூலி தொழிலாளியாக இருந்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்தநிலையில் இன்று மாலை ராம சந்திரன் பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது சிலர் அவரை வழிமறித்து தகராரில் ஈடுபட்டதாகவும், தொடர்ந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சராசரி ராம சந்திரனை குத்திவிட்டு தப்பியுள்ளனர்.தொடர்ந்து உயிருக்கு போராடிய நிலையில் சாலையில் கிடந்த உள்ள ராம சந்திரனை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.இந்த நிலையில் வழியிலேயே ராம சந்திரன் உயிரிழந்தார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சம்பவம் குறித்து மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக ராம சந்திரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது, தொடர்ந்து ராம சந்திரனை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..