Home செய்திகள் மருத்துவச் சிகிச்சை-முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த மக்கள்.

மருத்துவச் சிகிச்சை-முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த மக்கள்.

by mohan

கிருஷ்ணகிரி மாவட்டம்இ சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சாமனப்பள்ளி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பொதுமக்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளைச் செய்தல் தேவைப்படும் மருந்துகளை வழங்குதல் இயன்முறைச் சிகிச்சை இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம்இ ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச் சேவைகள் அளிக்கப்படும்.இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தில் தொற்றா நோய்களின் சுமையை எதிர்கொள்ளும் விதமாக நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று சில அத்தியாவசியமான சுகாதாரச் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்றதமிழ்நாடு முதலமைச்சர், நோக்கத்தினைச் செயல்படுத்தும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் ”மக்களைத் தேடி மருத்துவம்” என்ற புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தினைத் தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் இரண்டு பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று மருத்துவச் சேவை அளிப்பதைப் பார்வையிட்டு, அவர்களுக்கு மருந்துகளை வழங்கினார்.மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில் 45 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஃ நீரிழிவு நோய்க்கான மருந்துகளைக் களப்பணியாளர்கள் இல்லங்களுக்கே சென்று வழங்குதல் நோய் ஆதரவு சேவைகள் இயன்முறை மருத்துவச் சேவைகள் சிறுநீரக நோயாளிகளைப் பராமரித்தல் அத்தியாவசிய மருத்துவச் சேவைகளுக்கான பரிந்துரை குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளைக் கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்குத் தேவையான அனைத்து சுகாதாரத் தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், சமுதாயநலப் பதிவேட்டில் ஒவ்வொரு நோயாளியையும் பதிவு செய்து தொடர்ந்து கண்காணித்து வகைப்படுத்துவது இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.இத்திட்டத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாடு நிறுவனத்தின் பயிற்சி பெற்ற பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள் இடைநிலைச் சுகாதாரச் சேவையாளர்கள் இயன்முறை மருத்துவர்கள் நோய் ஆதரவுச் செவிலியர் ஆகியோர் பங்கு பெறுவர். பொது சுகாதார துறையின் களப்பணியாளர்கள் இக்குழுவினரின் செயல்பாடுகளைக் கண்காணித்து வழிநடத்துவார்கள். ஒவ்வொரு வட்டாரத்திலும் இத்திட்டத்திற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் பயனாளிகளின் சேவைக்காக ஈடுபடுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் முதற்கட்ட இலக்கான 30 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒரு கோடி மக்கள் பயன்பெறுவதன் மூலம் ஆண்டு இறுதியில் மாநில அளவில் ’அனைவருக்கும் நலவாழ்வு’ என்ற உயரிய இலக்கை அடைய இந்தத் திட்டம் வழிவகுக்கும்.இத்திட்டத்தினை மதுரை மாவட்டத்தில் காணொலிக்காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர், தொடங்கி வைத்தார்.மதுரை மாவட்டம் சேடபட்டி ஒன்றியத்தில் ”மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 24 தமிழ்நாடு மகளிர் நல மேம்பாடு நிறுவனத்தின் பயிற்சி பெற்ற பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள் 1 இடைநிலைச் சுகாதாரச் சேவையாளர் இயன்முறை மருத்துவர் நோய் ஆதரவுச் செவிலியர் ஆகியோர் ஈடுபடுத்தப்படுகின்றனர். சேடபட்டி வட்டாரத்தில் இத்திட்டத்திற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகனம் பயனாளிகளின் சேவைக்காக ஈடுபடுத்தப்படுகின்றன.இத்திட்டம் துவங்கப்பட்டு நாளது தேதி வரை தமிழ்நாட்டில் உயர் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களுள் – 179400 நபர்களுக்கும் நீரிழிவு நோய் உள்ளவர்களுள் – 119240 நபர்களுக்கும் உயர் இரத்த அழுத்த மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களுள் – 81400 நபர்களுக்கும் மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும், 12721 நபர்களுக்கு நோய் ஆதரவு சிகிச்சையும் 13474 நபர்களுக்கு இயன்முறை சிகிச்சையும் வழங்கப்பட்டது. இதைத் தவிர்த்து 34 சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகள் வழங்கப்பட்டது. இத் திட்டத்தினால், மொத்தம் 406269 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.இத்திட்டம் துவங்கப்பட்டு நாளது தேதி வரை மதுரை மாவட்டத்தில் உயர் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களுள் – 2413 நபர்களுக்கும் நீரிழிவு நோய் உள்ளவர்களுள் – 1343 நபர்களுக்கும் உயர் இரத்த அழுத்த மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களுள் – 1018 நபர்களுக்கும் மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும், 223 நபர்களுக்கு நோய் ஆதரவு சிகிச்சையும் 179 நபர்களுக்கு இயன்முறை சிகிச்சையும் வழங்கப்பட்டது. இதைத் தவிர்த்து 3 சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகள் வழங்கப்பட்டது.இத் திட்டத்தினால், மொத்தம் 5179 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டம் மதுரை மாவட்டம் முழுவதும் விரிவு படுத்தப்படவுள்ளது.இத்திட்டத்தின்கீழ், பயனடைந்த மதுரை மாவட்டம் டி. இராமநாதபுரத்தைச் சேர்ந்த.அஜித்தாவின் பெற்றோர்கள் தெரிவிக்கையில்:-பெருமூளை வாத நோயினால் பாதிக்கப்பட்ட எங்களுடைய குழந்தையை அடிக்கடி மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக அழைத்துச் செல்ல வேண்டியிருக்கும். அங்கும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி வரும். இதனால், எங்களுக்கும் ,எங்களது குழந்தைக்கும் மிகுந்த சிரமம் ஏற்படும். ஆனால், இப்பொழுது ”மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் மூலம் எங்களது வீட்டிற்கே வந்து மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துப் பெட்டகத்தையும் அளிக்கின்றனர். எங்களது ,குழந்தை போல் பாதிக்கப்பட்ட பல ஏழைஇ எளிய குழந்தைகளை பாதுகாக்கின்ற வகையில் இதுபோன்ற மகத்தான திட்டத்தினை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர், நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.இத்திட்டத்தின் கீழ், பயனடைந்த மதுரை மாவட்டம் டி.இராமநாதபுரத்தைச் சேர்ந்த,தங்கரமா லட்சும்யின் தந்தை தெரிவிக்கையில்:-லட்சத்தில் ஒரு நபருக்கு ஏற்படும் பெருமூளை வாத நோயினால், எனது குழந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது. நான் வசிக்கும் இடத்திலிருந்து மருத்துவமனைக்கு எனது குழந்தையை ஒரு முறை அழைத்து சென்று வருதற்கு ரூ.1000 வரை செலவாகும். இதனால், வளிய நிலையில் இருக்கும் எங்கள் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக மிகவும் சிரமமாக இருந்தது. மேலும், வாரந்தோறும் மருத்துவமனைக்கு செல்வதற்காக ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டி சூழ்நிலை வரும். இச்சூழ்நிலையில் ம தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தியுள்ள ”மக்களை தேடி மருத்துவம்” என்ற திட்டத்தினால், எங்கள் வீட்டிற்கே வந்து எனது குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதோடு, தேவையான மருந்துகளையும் வழங்கிறார்கள். இதனால், எங்களது சிரமம் குறைந்துள்ளது. எனது, குழந்தையின் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் இதய பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.தொகுப்பு:இ.சாலி தளபதி,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதுரை.வா.பெ.வினோத்,உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) மதுரை..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!