Home செய்திகள் பல இடங்களில் பல மாதங்களாக குடிநீர் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீண்.

பல இடங்களில் பல மாதங்களாக குடிநீர் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீண்.

by mohan

மதுரை மாநகராட்சி சார்பில் வைகை கூட்டுகுடிநீர் இரண்டாவது திட்டம் கீழ் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் மதுரை காளவாசல் பைபாஸ் சாலை நுகர்பொருள் வாணிபக் கிடங்கு நுழைவாயில்.. பைபாஸ் சாலை பழைய கருப்புசாமி கோவில் அருகில் மற்றும் பழங்காநத்தம் ரவுண்டானா எனப் பல பகுதிகளில் பல மாதங்களாக தங்கு தடையின்றி 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு சப்ளை செய்ய வேண்டிய குடிநீர் பல லட்சம் லிட்டர் பல பகுதிகளில் உடைந்து வீணாக செல்கிறது இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் ஏன் இதை சரி செய்ய முன்வரவில்லை கண்டும் காணாமல் இருப்பதற்கு காரணம் என அதிகாரிகளின் வீட்டில் சிறு குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சரி செய்யாமல் இப்படி கண்டும் காணாமல் இருப்பார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர் கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய வானிலை ஆராய்ச்சி கழகம் வரும் 10 ஆண்டுகளில் தான் உலக அளவில் ஆய்வு செய்ததில் தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் அதிக அளவு குடிநீர் பஞ்சம் ஏற்படும் என கணித்துள்ளது அப்படி இருக்கும் பட்சத்தில் ஏன் இவர்கள் குடிநீரை குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை 6 மாதத்துக்கும் மேலாக சரி செய்யாமல் இருப்பது இவர்களின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது என தெரியவருகிறது 10 ஆண்டுகளில் வரக்கூடிய தண்ணீர் பஞ்சம் ஒரே ஆண்டில் மதுரை மாவட்டத்திற்கு வந்துவிடுமோ என ஐயம் ஏற்பட்டுள்ளது மதுரை மாநகராட்சி ஆணையாளர் தனி கவனம் செலுத்தி குடிநீர் வழங்கும் குழாய்களில் எங்கிருந்து உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது என ஆய்வு செய்து அதை சரி செய்து மதுரை மக்களின் நலன் காக்க நடவடிக்கை எடுப்பாரா வருங்காலத்தில் குடிநீர் பஞ்சத்தை போக்க மாநகராட்சி ஆணையாளர் இப்போதே நடவடிக்கை எடுப்பாரா எதிர்பார்ப்புடன் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும்

செய்தியாளர் காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com