மதுரையில் நாய்களுக்கு உணவில் விஷம் வைத்து மூன்று நாய்கள் கொலை .

மதுரையில் நேற்றும் 3 நாய்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சமீப காலமாக மதுரையில் மாடுகள் மீது ஆசிட் ஊற்றுவதும், நாய்கள் விஷம் வைத்து கொலை செய்யப்படும் போது அதிகரித்து வருகிறது. நேற்றிரவு மதுரை கோமதிபுரம் பகுதியில் சாலைகளில் சுற்றித் திரிந்த 3 நாய்களுக்கு உணவில் விஷம் வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளன.விலங்கு நல ஆர்வலர் அளித்த புகாரைத் தொடர்ந்து அண்ணாநகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.மதுரை மாவட்டத்தில் கடந்த ஒன்பது மாதத்தில் 30க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து, ஐந்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்