கஞ்சா விற்பனையை காட்டி கொடுத்த கொலை வழக்கில் 6 பேர் தஞ்சை நீதி மன்றத்தில் சரண்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் ஜீவா நகரை சேர்ந்தவர் வசீம் அக்ரம் (35). இவர் முன்னாள் மனிதநேய கட்சியின் மாநில நிர்வாகியாகியாகவும் சமூக ஆர்வலராக இருந்து வந்துள்ளார்.இந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்துவந்த டீல் இம்தியாஸ் பற்றி காவல்துறைக்கு தகவல் கொடுத்து உள்ளார். காவல்துறையினர் அதிரடி சோதனை செய்து 8 கிலோ, கத்திகள், செல்போன்களை பறிமுதல் செய்தனர்.இதனால் இருவருக்கும் பகை இருந்தது.டீல் இம்தியாஸ் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த கூலிப்படையை வைத்து கடந்த 10 -ம் தேதி வெள்ளிக் கிழமை தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்தபோது காரில் வந்த கூலிப்படையினர் மாலை 6.30 மணிக்கு வெட்டிபடுகொலை செய்தனர்.இந்த கொலை சம்மந்தமாக கூலிப்படையை சேர்ந்த 2 பேரை இரவு 10 மணிக்கு காஞ்சிபுரம் வாகன சோதனையில் கைது செய்தனர்.மீதி 6 பேரை காவல்துறையினர் தேடி வந்த நிலையயில் நேற்று 14-ம் தேதி கூலிப்படையை சேர்ந்த முனீஸ்வரன், சத்யசீலன்.அகஸ்டின், செல்வக்குமார், அஜய், பிரவீன்குமார் ஆகிய 6 பேர் தஞ்சை நீதிமன்றத்தில் நீதிபதி பாரதியிடம் சரண் அடைந்தனர்.