அரசுப்பள்ளிகளில் தூய்மைப் பணி; சமூக ஆர்வலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி வளாகம் முழுவதும் தூய்மைப் பணி மேற்கொண்டு வருகின்றனர்தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் ஆன்லைன் மூலமாக மாணவர்கள் கல்வி கற்று வந்தனர். அதிலும் பெரும்பாலான மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்hவதில்லை. பெற்றோர் வழியே புலம்பல் இருந்து வருகின்றது.தமிழ்நாட்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ள நிலையில் செங்கம் பகுதியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகள் முழுவதும்மாணவ, மாணவிகள் இயற்கை சூழலில் கல்வி கற்க ஏதுவாக பள்ளி வளாகத்தில் வளர்ந்திருந்த தேவையற்றி களர் செடிகள், புதர்களை பள்ளி நிர்வாகம், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், பள்ளி தலைமையாசிரியர் இரா.ஜெயந்தி தலைமையில் ஆசிரியர்கள் வேல்முருகன், சங்கீதா, தனலட்சுமி, நாராயணன், அரசு, மகேஸ்வரி, ஆறுமுகம் ,ராஜா, ஆகியோர் முன்னிலையில் தூய்மைப் பணியாளர்கள் செடிகொடிகளை அகற்றி வளாகத்தினை தூய்மைப்படுத்தினர்.  என்ன கல்வி குறித்து தூய்மை பணியாளர்களை மற்றும் ஆசிரியர்களை சமூக ஆர்வலர்கள் பெற்றோர்கள் பாராட்டி வருகின்றனர்

உதவிக்கரம் நீட்டுங்கள்..