பாரதியார் திருவுருவச் சிலைக்கு அமைச்சர், ஆட்சியர் மரியாதை .

பாரதியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுஅவரது திரு உருவச் சிலைக்கு அமைச்சர், ஆட்சியர் மரியாதை செலுத்தினர்.மகாகவி பாரதியார் அவர்களின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.மதுரையில் பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்