மதுரை மாநகராட்சிவைகை ஆற்றின் கரைகளில் சங்க பூங்காமதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்.

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்றின் இருகரைகளிலும் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப்பணிகள், பூங்கா அமைக்கும் பணிகள், தடுப்பு சுவர் கட்டும் பணிகள் உள்ளிட்ட பணிகளை ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், தலைமையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்சு.வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டார்.நாடாளுமன்ற உறுப்பினர், தெரிவித்ததாவது :மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்றின் இருகரைகளிலும் அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகள் ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. குறிப்பாக, வருகின்ற 17.09.2021 ஸ்மார்ட் சிட்டியின் ஆலேசானைக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக நடைபெற்று வரும் பணிகளை கள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.வைகை ஆற்றின் கரைகளில் இரண்டு இடங்களில் பூங்காக்கள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த பூங்காவில், சங்க இலக்கியத்தில் பரிபாடலை கொண்டு ஒன்பது பாடல்களை அடிப்படையாக கொண்டு சங்க பூங்காவாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரையின் வரலாற்றை குறிக்கும் ஓவியங்கள் வரைவதற்கு இடவசதி உள்ள இடங்களில் சங்க இலக்கிய ஓவியங்கள் வரைவதற்கும் மதுரையின் பாரம்பரியத்தை நினைவுகூறும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்படும். அதே போல, பூங்காவில் உள்பகுதியில் உடற்பயிற்சி கூடம் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பகுதியின் இளைஞர்களின் வசதிக்காக இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட உள்ளது.மேலும், நடைபயிற்சி, சைக்கிளிங், செல்வதற்கும் மற்றும் வண்ண விளக்குகள் அமைப்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், வைகை ஆற்றின் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்காக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதனால், கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும் என்றார்.அதனைத் தொடர்ந்து, வைகை ஆற்றின் இருகரைகளில் நடைபெற்று பணிகள், கள்ளழகர்; எழுந்தருளும் ஆண்டாள்புரம் பகுதிகள், குருவிக்காரன் சாலை உயர்மட்ட பாலப் பணிகள் மற்றும் தெப்பக்குளம் பகுதிகளில் உள்ள பூங்காக்கள் பராமரிப்பு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, நகரப்பொறியாளர் (பொ)சுகந்தி, செயற் பொறியாளர்கள்அரசு,கருப்பாத்தாள்,சேகர், உதவி செயற்பொறியாளர்ஆரோக்கியசேவியர்,முருகேசபாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர்மகேஸ்வரன், உதவிப் பொறியாளர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்