
மதுரை விராட்டிபத்து பகுதியை சேர்ந்தவர் கணேசன் என்பவர் எச். எம். எஸ் காலனி புதுவாழ்வு நகரில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். அங்கு தனியார் சித்தா மருத்துவமனை கட்டுமானத்திற்காக ஜல்லி, மணல் கொட்டப்பட்டுள்ளது. இது பக்கத்து வீடு வரை பரவியதால் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆசாரிகணேசன் வாகனங்களை நிறுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்தநிலையில், ஆசாரி கணேசன் மகன் அருண் பிரகாஷ் என்பவர் வாட்ச்மேனாக வேலை பார்த்து வரும் கணேசனிடம் வந்து எங்கள் வீட்டு வாசல் வரை ஏன் ஜல்லி மணல் கொட்டுக்கிறீர்கள், எனக் கேட்டு இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரம் அடைந்த அருண் பிரகாஷ் காவலாளியை கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து காவலாளி கணேசன் இதுதொடர்பாக தனது மகன் கௌதமிடம் செல்போன் மூலம் நடந்தவற்றை கூறியுள்ளார்.இதையடுத்து கௌதம், மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் லோடுமேன் வேலை பார்க்கும் கரிமேடு பகுதியில் உள்ள கண்மாய்க்கரை முனியாண்டி கோவில் தெருவைச் சேர்ந்த செல்லப்பாண்டி மகன் விக்னேஷ் (வயது 22) என்பவர் உள்ளிட்ட சிலரை தனக்கு துணைக்காக சம்பவ இடத்துக்கு வந்து தனது தந்தையை தாக்கியது சம்பந்தமாக தகராறில் ஈடுபட்டுள்ளார்.இதில், ஆத்திரம் அடைந்த அருண் பிரகாஷ் வீட்டில் இருந்த கத்தியால்விக்னேஷ் – ஐசரமாரியாக குத்தியதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக இறந்து விட்டார்.இதுகுறித்து, மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து அருண்பிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.