
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் தர்மபுரம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 33வது விநாயகர் சதுர்த்தி திருவிழா சிறப்பாக நடைபெற்றது .இந்த திருவிழாவில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானமும் 16 ஊனமுற்றவர்களுக்கான இருசக்கர வாகனம் 10 தையல் மெஷின் 16 இலவச திருமணங்கள் நடைபெற்றன இந்த நிகழ்ச்சியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பால்வளத் துறை அமைச்சருமான கே டி ராஜேந்திர பாலாஜி மற்றும் சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்எஸ்ஆர் ராஜவர்மன் இராஜபாளையம் ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணராஜ் நகரச் செயலாளர் பாஸ்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத் தலைவர் ராமராஜ் ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா இந்த ஆண்டு அரசின் உத்தரவின் பேரில் விநாயகரை வைத்து பொதுவெளியில் வழிபாடு செய்யக்கூடாது என்ற உத்தரவின் பேரில் நற்பணி மன்றத்தின் சார்பில் செய்யப்பட்ட 12 அடி விநாயகர் பக்தர்கள் தரிசனம் செய்யாமல் மூடி வைக்கப் பட்டது .33வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.