விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்கு தடை விதித்த திமுக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் இந்து முன்னணி கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்கு தடை விதித்துள்ள தமிழக திமுக அரசை கண்டித்தும் இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும் திமுக அரசு என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தின்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற விநாயகர் வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை கைது செய்ததை கண்டித்தும் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்துவதற்கு அனுமதி வழங்க கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன 20க்கு மேற்பட்டோர் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மறியல் போராட்டம் நடைபெறும் என்ற அச்சத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது..

செய்தியாளர் வி காளமேகம்