மதுரை ஆதீனம் இலவசத் திருமணங்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 33வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா மதுரை ரோட்டில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் வைத்து நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் கலந்துகொண்டு 16 இலவசத் திருமண மணமக்களை ஆசிர்வாதம் செய்தார் மேலும் ஊனமுற்றோருக்கான இரு சக்கர வாகனங்கள் வழங்கினார்.ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி திருவிழா 12 அடி உயரத்தில் விநாயகர் சிலை செய்யப்பட்டிருந்த பொழுதும் அரசு உத்தரவு இல்லாததால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்காமல் மூடி வைக்கப்பட்டது .இது பக்தர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது பிறப்பினும் கோவிலில் உள்ள விநாயகரை தரிசனம் செய்து பக்தர்கள் ஆறுதல் அடைந்தனர் மேலும் இந்த விநாயகர் கோவில் சதுர்த்தி திருவிழா முன்னிட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டன விழா ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் காமராஜ் தலைமையில் சென்ற குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்..

செய்தியாளர் வி காளமேகம்