தமுமுகவின் வெளிநாட்டு பிரிவான இந்தியர் நலவாழ்வு பேரவை (IWF) க்கு விருது வழங்கிய தாதாபாய் டிராவல்ஸ்…

சவூதி அரபியாவிலிருந்து 200க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்களை தமிழகம் உட்பட தாயகத்தின் பல்வேறு பகுதிகளுக்குவெற்றிக்கரமாக இயக்கிய தாதாபாய் டிராவல்ஸ் சார்பாக, கடந்த 09-09-21 அன்று ஜித்தா இண்டர்காண்டிணன்டல் ஆடிட்டோரியத்தில் 200 வது விமான சேவைக்கான சிறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தாதாபாய் டிராவல்ஸ் மேலாளரும் சமூக ஆர்வலருமான சகோ. அபூபக்கர் தலைமை தாங்கினார். தாதாபாய் டிரவல்ஸ் சார்பாக வாழ்த்துச் செய்தியில் சவுதியில் இருந்து தாயத்தில் இல்லம் சொல்லும் வரை தமுமுக மற்றும் IWF தன்னார்வலர்கள் பணி எடுத்துக் கூறப்பட்டது. விருதினை வழங்கி சிறப்பு அழைப்பாளர் சவுதி விமான நிறுவத்தின் மேலாளர் தமுமுகவின் மனிதநேயப் பணியை பாராட்டி மற்றும் துஆ செய்தார்

இந்திய மக்கள் மிகவும் இறுக்கமான நேரத்தில் கடுமையான கூட்டணி உழைப்பில் வெற்றிகரமாக அல்லாஹ்வின் உதவியால் 200 விமானச் சேவை செய்த அதனை சிறப்பாக வழிநடத்திய  அபுபக்கர் மற்றும் தாதாபாய் குழுவினர்களுக்கு IWF சார்பாக மனமாந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தூதரக அதிகாரிகள், சவுதியா விமான நிறுவன மேலாளர்கள், பல்வேறு டிராவல்ஸ் மேலாளர்கள், ஜித்தா தமிழ் சங்க நிர்வாகிகள் மற்றும் தமுமுகவின் வெளிநாட்டு பிரிவான இந்தியர் நலவாழ்வு பேரவை (IWF) நிர்வாகிகள், ததஜ நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் JTS, IWF, TNTJ நிர்வாகிகளுக்கு தாதாபாய் டிராவல்ஸ் சார்பாக விருதுகள் வழங்கப்பட்டது.