
மதுரை பீ.பி. குளம் உழவர்சந்தை அருகே பச்சிளங் குழந்தையின் தலையை நாய் தூக்கிவந்த சம்பவத்தால் பரபரப்புமதுரை பீ.பீ.குளம் உழவர்சந்தை அருகேயுள்ள இந்தியன் வங்கியில் பணம் எடுப்பதற்காக மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்த பகுதியில் நடந்துசென்றுள்ளார். இந்நிலையில்அந்த பகுதியில் நாய் ஒன்று பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங்குழந்தையின் தலையை தூக்கி வந்துள்ளது.இதனை பார்த்த இளைஞர் காவல்துறைக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தகவல் அளித்துள்ளார்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் காவல்துறையினர் குழந்தையின் தலையை மீட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.