இராஜபாளையம் பகுதியில் கொரோணா தடுப்பூசி போடப்பட்ட பெண் திடீரென உயிரிழப்பு.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவரம்பட்டி சோழராஜபுரம் தெரு பகுதியில் வசித்து வருபவர் தனலட்சுமி (வயது 56). இவர் நேற்று அப்பகுதியில் நடைபெற்ற கொரோணா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டதன் விளைவாக அருகில் இருந்த உறவினர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.இதுகுறித்து உறவினர்கள் கூறும்போது, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று மாத்திரை உண்டு வரும் நிலையில் கொரோணா பரிசோதனை முகாமில் எவ்வித பரிசோதனையும் செய்யாமல் ஒரு தடுப்பு ஊசி செலுத்தி அதன் விளைவாக தான் உயிரிழப்பு நிகழ்ந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்மேலும் இதனை கவனத்தில் கொண்டு தடுப்பு முகாமில் உரிய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் உறவினர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்