இராஜபாளையத்தில் ஊர்காவல்படை காலிப் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற்றது 69 பேர் பங்கேற்பு .

விருதுநகர் மாவட்டம் ஊர்க்காவல் படை காலியாக உள்ள படைத்தளபதி படைப்பிரிவு தளபதி உதவி படைப்பிரிவு தளபதி பிரிவு தலைவர் பிரிவு உதவி தலைவர் உள்ளிட்ட 56 காலி இடங்களுக்கு பதவி உயர்வு தேர்வு நடைபெற்றது உலக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரன் காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் .துணை காவல் கண்காணிப்பாளர் ஆயுதப்படை சிவகுமார் ஊர்க்காவல் படை தளபதி ராம்குமார் வட்டார தளபதி அருள் செல்வி ஆகியோர் மேற்பார்வையில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.எழுத்துத்தேர்வு இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி வைத்து நடைபெற்றது இந்த தேர்வில் 69 பேர் கலந்து கொண்டனர் இதில் 47 பேர் தேர்ச்சி பெற்று பதவி உயர்வு பெற்றனர் தேர்வு ஏற்பாடுகளை சார்பு ஆய்வாளர் லாவண்யா மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் கம்பெனி கமாண்டராக கண்ணன் கருப்பசாமி உள்ளிட்ட சிறப்பாக செய்திருந்தனர்…

செய்தியாளர் வி காளமேகம்