ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் சகாயம் அவர்களின் வழிகாட்டுதலுடன் இயங்க கூடிய நேர்மை ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன.

மதுரை தெற்குவாசல் பகுதியில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்அவர்களின் வழிகாட்டுதலின்படி இயங்கி வரும் நேர்மை ஐ.ஏ.எஸ் அகாடமி பயிற்சி மையத்தில், குரூப்-2 மற்றும் குரூப் 4-தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டதுஇந்த நிறுவனம் கடந்த எட்டு வருடமாக இலவச பயிற்சியை தொடங்கி சிறப்பாக சேவையாற்றி வருகிறது தற்போது 80 மாணவர்கள் இலவசமாக பயிற்சி பெற்று வருகின்றனர் தற்போது டிஎன்பிஎஸ்சி மற்றும் யுபிஎஸ்சிகான இலவச பயிற்சிகள் அளித்து வருகின்றனர் இனிவரும் காலங்களில் வரவிருக்கும் தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கவிருப்பதாகவும் தெரிவித்தனர் மேலும் தங்களுடைய நேர்மை ஜ.ஏ.எஸ் அகடாமியில் இலவச நூலகம் செயல்பட்டு வருவதாகவும் போட்டி தேர்வில் பங்குபெறும் மாணவ மாணவியர்கள் காலை 6 மணியிலிருந்து 9 மணிவரை இலவசமாக பயன்படுத்திகொள்ளலாம் என்று தெரிவித்தனர் மேலும் தங்களிடம் படித்த மாணவ மாணவியர்கள் அளிக்கும் சிறு நன்கொடையின் மூலம் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்இந்நிகழ்வில் நிர்வாக இயக்குனர் சுஜாதா பார்த்தசாரதி மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நாகஜோதி மற்றும் கார்த்திக் சுந்தரம் சிறப்பு பயிற்சியாளர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இத்தேர்வுக்கான பயிற்சியில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆதரவற்றோர்களுக்குமுன்னுரிமைவழங்கப்படுகின்றன..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்