Home செய்திகள் வெரிகோஸ் நோய் பாதிப்புடன் பணிபுரியும் அரசு போக்குவரத்து நடத்துனர் – பணி மாற்றம் செய்து தர கோரிக்கை.

வெரிகோஸ் நோய் பாதிப்புடன் பணிபுரியும் அரசு போக்குவரத்து நடத்துனர் – பணி மாற்றம் செய்து தர கோரிக்கை.

by mohan

மதுரை மாவட்டம் தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார்(44),இவர் தனது மனைவி மற்றும் இரு குழுந்தைகளுடன் வாழ்ந்துவருகிறார்,இவர் கடந்த 2006ஆம் ஆண்டு அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணி புரிந்துவருகிறார்.இந்நிலையில் கடந்த 2018ஆம் பணி முடித்துவிட்டு வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பியபோது குமாரம் அருகே திடிரென சாலை விபத்து ஏற்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியுள்ளார்.இதனையடுத்து தனது சேமிப்பு மற்றும் மனைவி குழுந்தைகளின் நகைகளை விற்று 35லட்சம் ரூபாய் செலவு செய்து உடல்நலம் பெற்றுள்ளார்.இருந்தபோதிலும் விபத்து காரணமாக இரு கால்களிலும் நரம்பு சுருட்டு நோய் என்ற வெரிகோஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து மருத்துவ விடுப்பிற்கு பின் பணிக்கு திரும்பி மாற்று பணி தர கோரிக்கை விடுத்துள்ளார்.ஆனால் போக்குவரத்து துறை நிர்வாகமோ ஓட்டுனராகவே பணிபுரிய வேண்டும் எனவும், இல்லையெனில் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்துவிடுவோம் என கூறியுள்ளனர்.தொடர்ந்து தனது கால்களால் நிற்க முடியாது என கூறிய நிலையில் தற்காலிகமாக அண்ணா பேருந்து நிலையத்தில் டைம் கீப்பராக பணி அமர்த்தியுள்ளனர்இதனால் போதிய இட வசதி இல்லாத நிலையிலும் வெரிகோஸ் பாதிக்கப்பட்ட தனது கால்களுடன் நடக்க முடியாமல் கடுமையான வலியை பொறுத்துகொண்டு தட்டுதடுமாறி பயணிகள் அமரும் இடத்தில் காலை நீட்டியபடி அமர்ந்து பணிபுரிகிறார்வெரிகோஸ் நோயால் கால் இரண்டிலும் ஈ,எறும்பு மொய்த்துகொண்டே இருப்பதால் கையில் வைத்துள்ள அட்டையை பயன்படுத்தி விசிறிகொண்டே பணியில் ஈடுபட்டுவருகிறார்.ஆனாலும் பயணிகள் மற்றும் போக்குவரத்து பணியாளர்களிடத்தில் கண்ணியத்துடன் நடந்துகொள்கிறார் நடத்துனர் செல்வக்குமார்வெரிகோஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும் இதுபோன்ற கடினமான பணிகளை மேற்கொள்ள இயலாத சூழலிலும் தனது குடும்ப வறுமைக்காக பணிபுரிந்துவருகிறார்.இவர் கணிணி பட்டயபடிப்பு படித்துள்ளதால் போக்குவரத்து அலுவலகத்திலயே பணி கிடைத்தால் தன்னால் வலியின்றி பணிபுரியலாம் என தெரிவிக்கிறார்.வெரிகோஸ் நோய் பாதிக்கப்பட்ட நிலையிலும் பயணிகளுக்கு சேவையாற்றிவரும் நடத்துனர் செல்வக்குமாரின் செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டிவரும் நிலையில் அவருக்கு மாற்றுபணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!