பேராசிரியர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை.

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் வக்பு வாரிய கல்லூரியில் ஆசிரியர் தின நிகழ்ச்சி நடைபெற்றது.கல்லூரி பேராசிரியர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் இதுகுறித்து கூறுகையில்:வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சென்ற ஆண்டு வக்பு வாரிய கல்லூரி வளாகத்தில் சமூக ஆர்வலர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று பனைவிதைகள் நடப்பட்டது.அவை தற்போது சிறப்பாக முளைத்து வருவதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தோம்.இதனை நல்ல முறையில் பராமரித்து வரும் கல்லூரி முதல்வர் முனைவர். முகமது அஸ்லம் மற்றும் பேராசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தோம் என்றார்.இந்த நிகழ்ச்சியில் கலாம் சமூக அறக்கட்டளை நிறுவனர் மாயகிருஷ்ணன், உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர்கள் அமைப்பின் நிறுவனர் சேக்மஸ்தான், சமூக ஆர்வலர்கள் கிரேசியஸ், பெரியதுரை மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்