வணிகர்களுக்கு தென்காசி எம்எல்ஏ முக்கிய வேண்டுகோள்..

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருகிறது. வணிகர் நல வாரியத்தின் மூலம் வணிகர் நலனுக்காக பல்வேறு திட்டப் பணிகளை செய்து வருகிறது.தென்காசி மாவட்டத்திலுள்ள வணிகர்கள் அனைவரும் வணிகர் நல வாரியத்தில் இணைந்து பயன்பெற வேண்டுமென தென்காசி எம்எல்ஏவும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எஸ். பழனி நாடார் வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்காசி மாவட்டம் சுரண்டையில் சுரண்டை வியாபாரிகள் சங்கம் தமிழக அரசின் வணிக வரித் துறை இணைந்து நடத்திய வணிகர் நல வாரியத்தில் கட்டணமின்றி உறுப்பினராக இணையும் சிறப்பு முகாம் சுரண்டையில் உள்ள வள்ளி முருகன் ஹார்டுவேர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுரண்டை வியாபாரிகள் சங்க தலைவர் கேடிகே காமராஜ் தலைமை வகித்தார். வர்த்தகர்கள் சங்க நிர்வாகி ரத்தினசாமி, சுரண்டை வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் சிவசக்தி முத்தையா, செயற்குழு உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் வியாபாரிகள் சங்க செய்தி தொடர்பாளர் ராஜகுமார் வரவேற்றுப் பேசினார் தென்காசி எம்எல்ஏவும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமாகிய எஸ் பழனி நாடார் முகாமை துவக்கி வைத்து வணிகர்களிடமிருந்து நல வாரிய உறுப்பினர் விண்ணப்பப் படிவங்களை பெற்றார். அப்போது பேசிய அவர் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான அரசு விவசாயிகள், பெண்கள், மாணவ மாணவியர், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருகின்றது வணிகர் நல வாரியத்தின் மூலம் வணிகர் நலனுக்காக பல்வேறு திட்டப் பணிகளை செய்து வருகின்றார் ஆகவே தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகர்களும் வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இணைந்து பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.நிகழ்ச்சியில் மாநில வரி அலுவலர் ஜெயமாலா, துணை மாநில வரி அலுவலர்கள் ஆரோக்கியசாமி, ஜெயந்தி, வரி வசூல் ஆய்வாளர் சரவணன், வியாபாரிகள் சங்க செயலாளர் ஏடி நடராஜன், பொருளாளர் தனபால், துணை செயலாளர் துரைமுருகன், ஓட்டல் உரிமையாளர் சங்க செயலாளர் ஜேக்கப், பொன் வேலன் அரவிந்த், காங்கிரஸ் நிர்வாகிகள் பிரபாகரன், தெய்வேந்திரன், அரவிந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உதவிக்கரம் நீட்டுங்கள்..