இடிந்த வாய்க்கால் பாலம் சரிசெய்ய பெண்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 98வது வார்டு மணி இம்பாலா தியேட்டர் எதிரே உள்ள கால்வாய் வாய்க்கால் பாலம் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உடைந்து சிதற வாங்கி உள்ளது இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் பாலத்தின் மீது உள்ள கம்பியில் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர் அப்பகுதி பெண் ஒருவர் கூறுகையில் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகவும் அப்பெண்மணி தனது குழந்தையுடன் தினசரி ஆபத்தான முறையில் காம்பின் மீது நடப்பதால் உயிரை கையில் பிடித்து செல்லும் நிலை உள்ளது எனவும் எந்த நேரத்திலும் கீழே விழுந்து உயிர் போய்விடுமோ என்ற பயத்திலேயே செல்கிறோம் என்று கூறினார் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..