சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் 150-வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. சோழவந்தான் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள வ.உ.சி.சிலைக்கு திமுக சார்பாக மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்கள். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ராஜா,சுப்பிரமணி,மாவட்ட பிரதிநிதி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொறுப்புக் குழு தலைவர் பசும்பொன் மாறன் வ.உ.சி.திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தார்.முன்னாள் பேரூராட்சித் தலைவர் அய்யப்பன் இனிப்பு வழங்கினார்.இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் வெற்றி,நகர அமைப்பாளர் சுரேஷ்,பிரதிநிதி தவமணி,நாகேந்திரன், அவைத்தலைவர் வேதநாயகம் தொழில் நுட்ப அணி பார்த்திபன் இளைஞர் அணிச் செயலாளர் காளிதாஸ் உள்பட திமுகவினர் கலந்து கொண்டனர் காங்கிரஸ் கமிட்டி வட்டாரத் தலைவர் பழனிவேல் தலைமையில் நகரத் தலைவர் முத்துப்பாண்டி வ உ சி சிலைக்கு மாலை அணிவித்தார். நிர்வாகிகள் பழனிவேல் வையாபுரி ராமன் டெய்லர் ரவி சேகரன் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர் அதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் தலைமையில் மாவட்ட கவுன்சிலர் அகிலாஜெயக்குமார்,முன்னாள் பேரூராட்சிதலைவர் முருகேசன்,மாவட்ட மகளிரணி செயலாளர்லட்சுமி, நகரச் செயலாளர் முருகேசன்ஆகியோர் முன்னிலையில் தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் வ.உ.சி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தார் நண்பரே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் ராமலிங்கம் தங்கபாண்டி நகர இளைஞர் அணி செயலாளர் கேபிள்மணி,தியாகு ராஜபாண்டி கருப்பட்டி கருப்பையா பிரேம் உள்பட அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஒன்றிய நிர்வாகி தவமணி மாவட்ட குழு செல்வராஜ் நகரச் செயலாளர் சுந்தரம் ஆகியோர் வ. உ.சி.திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தனர். அ.ம.மு.க.சார்பாக ஒன்றிய செயலாளர் ராஜன் மாவட்ட நிர்வாகி முல்லை சக்தி முன்னிலையில் நகர செயலாளர் சத்யபிரகாஷ் வ.உ.சி.சிலைக்கு மாலை அணிவித்தார்.மதிமுக ஒன்றிய செயலாளர் துரைப்பாண்டி தலைமையில் ஒன்றிய நிர்வாகி நந்தகுமார் முன்னிலையில் வ.உ.சி.சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன்,ஒன்றிய தலைவர் முருகேஸ்வரி,தேமுதிக சார்பாக மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் மேலக்கால் முத்துப்பாண்டி மற்றும் நிர்வாகிகளும் முள்ளிப்பள்ளம் மன்னாடி மங்கலத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் அறிவியல் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் வ உசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் மேலும் நாம் தமிழர் கட்சி,தெற்கு ரதவீதி வேளாளர் உறவின்முறை,வடக்கு ரதவீதி வேளாளர் உறவின்முறை,அனைத்து பிள்ளைமார் சங்கம், மருதநாயகம் பிள்ளை ஆகிய அமைப்புகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.இதில்சோழவந்தான்,முள்ளிப்பள்ளம்,மன்னாடிமங்கலம்,குருவித்துறை, இரும்பாடி,கருப்பட்டி,தேனூர், மேலக்கால்,திருவேடகம்,தச்சம்பத்து,வாடிப்பட்டி,மேட்டுநீரேத்தான்,கட்டகுலம்,திருவாலவாயநல்லூர்,சித்தாலங்குடி,சி.புதூர் ஆகிய பகுதிகளில் இருந்து வெள்ளாளர் உறவின்முறை சங்க நிர்வாகிகள் வ.உ.சிதம்பரம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
சோழவந்தான் பேரூர் கழக மாணவரணி சார்பாக வ உ சிதம்பரம் பிள்ளை 150 வது பிறந்த நாளை முன்னிட்டு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் .பசும்பொன் மாறன் தலைமையில் சோழவந்தானில் உள்ள வஉசி யின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் பேரூர் கழக மாணவரணி செயலாளர் எஸ் ஆர் சரவணன் மற்றும் துணைச் செயலாளர் கணேசன் அருண் ராமநாதன்முத்து விஜயன் கண்ணன் மகேஸ்வரன் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.