
மதுரை நகரில் இருந்து திருமங்கலம் நோக்கி செல்ல கூடிய அனைத்து பேருந்துகளும் திருநகர் ஒன்றாவது பேருந்து நிறுத்தத்தில் வேண்டும் என நீதிமன்ற உத்தரவு பெற்றபின் மாவட்ட ஆட்சியாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார் அதையும் மீறி சில அரசு பேருந்து ஓட்டுனர்கள் திரு நகர் 1-வது பேருந்து நிறுத்தத்தில் நிற்பது இல்லை இன்று காலை 9/20 அளவில் பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தTN58N1539 என்கின்ற அரசு பேருந்து திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது நகர் 1-வது பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் பேருந்தை நிறுத்த கையை காட்டியுள்ளார்கள் எனினும் ஓட்டுனர் அலட்சியமாக பேருந்தைப் வேகமாக இயற்றியதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர் மேலும் பேருந்தில் அதிகப்படியாக 5லிருந்து 8 பேர் மட்டுமே பயணித்ததாக ஏன் பேருந்து நிறுத்த வில்லை அரசாங்கத்திற்கு அதிக அளவில் பணம் வருகிறதா இல்லை போக்குவரத்து கழகம் வசூல் ஆகக் கூடாது என்ற எண்ணத்தில் பேருந்து ஓட்டுனர் இயக்குகிறாரா என சந்தேகம் எழுகிறது எனவே சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது போக்குவரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அனைத்து போக்குவரத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஒன்றாவது பேருந்து நிலையத்தில் மட்டுமல்லாது அனைத்து பேருந்து நிறுத்தத்திலும் பேருந்தை நிறுத்தி செல்ல வேண்டும் எனவும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்பட இருப்பதால் இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது நடவடிக்கை எடுக்குமா போக்குவரத்து நிர்வாகம்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.