மதுரையில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த, நபர் போக்சோவில் கைது.

மதுரை கீரைத்துறை காமராஜ புரத்தைச் சேர்ந்தவர் முத்து இவரது 7 வயது மகள் (அனிதா)பெயர் மாற்றப்பட்டுளாளது ..அதே பகுதியில் உனள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த நிலையில் சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வந்த  உக்கிரபாண்டி வயது 42 என்பவர் கடந்த 26-ஆம் தேதி சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இதனால் வலியால் அவதிப்பட்டு வந்த சிறுமியை, பெற்றோர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.தொடந்து இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினர் சாந்தி மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வீரையா ஆகியோர் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கீரைத்துறை, காமராஜபுரத்தைச் சேர்ந்த உக்கிரபாண்டியைபோக்ஸோ சட்டத்தில் கைதுசெய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்