பெங்களூரிலிருந்து மதுரைக்கு கடத்திவரப்பட்ட 292 உயர்ரக மதுபான பாட்டில்கள் பறிமுதல்.

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதிக்கு பெங்களூரிலிருந்து TN-58 BA-5305 என்ற கன்டெய்னர் லாரியில் மதுபான பாட்டில்கள் கடத்தி வருவதாக நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது., தகவலின் அடிப்படையில் கண்டைநேர் லாரியானது திண்டுக்கல்-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது துவரிமான் விளக்கு அருகே சம்பந்தப்பட்ட சரக்கு லாரி போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர்.சோதனை செய்ததன் அடிப்படையில் கன்டெய்னர் லாரியில் 292 உயர் ரக மதுபான பாட்டில்கள் மறைத்து வைத்து கடத்தி வந்தது உறுதியானது., மேலும் கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்தவர்கள் கரடிக்கல் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகன் சுரேஷ் (29), பல்கலை நகரைச் சேர்ந்த ராஜா மகன் ராஜேந்திரன் (48) என்பது தெரியவந்தது.இவர்கள் கப்பலூர் தொழிற்பேட்டையில் உற்பத்தி செய்யும் பொருள்களை பெங்களூர்விற்கு கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் இருந்து வரும்பொழுது அவ்வப்போது மதுபான பாட்டில்களை வாங்கி வந்து கப்பலூர் பகுதிகளில் பிளாக்கில் விற்று வந்தது விசாரணையில் ஒப்புக்கொண்டனர்.இதனை வாடிக்கையாக வைத்து ஓட்டுநர்கள் இருவரும் தற்போது பெங்களூருவிலிருந்து மதுபான பாட்டில்கள் வாங்கி வருவதாக போலீஸாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஓட்டுநர்கள் இருவரும் பிடிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்