ஊராட்சிகளுக்கு வழங்குவதற்க்காக மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட மரக்கன்றுகள் வீணாக்கப்படுவதாக புகார் .

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 கிராம ஊராட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில் நாவல், அசோக மரம், கடம்ப மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் வழஙகப்பட்டது. கிராம ஊராட்சிகளில் உள்ள சாலையோரங்களில் இந்த மரக்கன்றுகளை நட்டு மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் தண்ணீர் ஊற்றி பராமரிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்ட நிலையில் இந்த மரக்கன்றுகளை முறையாக ஊராட்சிகளுக்கு பிரித்து வழங்காமல் கடந்த ஒரு வாரமாக திருநகரில் உள்ள யூனியன் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மரக்கன்றுகள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து குப்பை போல் கிடக்கிறது. மேலும் சில மரக்கன்றுகளின் பைகள் கிழிக்கப்பட்டு அதில் இருந்த மண் ஆணையர் அறை முன்பு கொட்டப்பட்டுள்ளது. ஊரட்சிகளுக்கு வழங்கப்பட்ட மரக்கன்றுகளை முறையாக அனைத்து ஊராட்சிகளுக்கும் பிரித்து வழஙகி அதை நட்டு பராமரிக்க வேண்டும் எனவும். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்