Home செய்திகள் திருமங்கலம் வட்டம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாம் நடைபெற்றது.

திருமங்கலம் வட்டம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாம் நடைபெற்றது.

by mohan

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டார வேளாண்மை உழவர் மையத்தில் விவசாயிகளுக்கான சிறுதானிய சாகுபடி குறித்த விஞ்ஞானிகள் விரிவாக்க பணியாளர்கள் விவசாயிகள் இணைப்பினை வலுப்படுத்தும் வகையில் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தலைமை ஏற்று சொர்ண பாரதி ஒருங்கிணைப்பாளர் வட்டார தொழில்நுட்பக் குழு வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் முனைவர்உஷாராணி முனைவர் கிருஷ்ணகுமார் மற்றும் சிவானந்தன் முதன்மை நிர்வாக அலுவலர் குறும்பன் ஹேமலதா அலெக்ஸ் பிரிதிவிராஜன் மகாலட்சுமி அக்ரி ஆகியோர் சிறுதானியம் வளர்ப்பு பராமரிப்பு மற்றும் உடல் ஆரோக்கியத்தின் மருத்துவகுண ம் குறித்து திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் மற்றும் சிறுதானிய சாகுபடி குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் ஆர்வத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். இம்முகாமில் விவசாயிகளின் பார்வைக்காக மாட்டுச் சானத்தால் செய்த பொம்மைகள் உருவப்படங்கள் அதிசய பொருளாக காட்சிக்கு வைக்கப்பட்டது. மேலும் நெல் பயிர்கள் அரிதான பழங்கால பாரம்பரிய சிறுதானியங்களை காட்சிப் பொருளாக வைத்து தானியங்கள் வளர்ப்பு முறைகள் குறித்து அறிவுரைகள் கூறி வளர்ப்பு விதங்கள் பற்றி தெளிவுபடுத்தி குறிப்பாக பூங்கார் அரிசி, சுகப்பிரசவம் ஆகும் குணம், கருப்பு கவுனி அரிசி புற்றுநோய் குறித்த மருத்துவ குணம் கொண்டது, காட்டுயானம் அரிசி, கருத்தக்கார் அரிசி, காலாநமக் அரிசி, மூங்கில் அரிசி அறுபதாம் குறுவை அரிசி, மேலும் போன்ற பழங்கால தானியங்கள் பற்றி முகாம் நடைபெற்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com