உசிலம்பட்டியில் காணொளி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் காணொளி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குறைந்த அளவே விவசாயிகள் பங்கேற்றனர் .மேலும் கூட்டத்தில் 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என சமூக ஆர்வலர் பால்ராஜ் வலியுறுத்தி பேசினார். மேலும் 58 கிராம கால்வாய் இளைஞர் குழுவினர் சௌந்திரபாண்டியன் சார்பில்வன விலங்குகள் விளை நிலங்களில் புகுவதை இயற்கை முறையில் தடுத்தல் தொடர்பாக மானிய விலையில் பூச்சிக்கொல்லி மருந்து கிடைக்க வழிவகை செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

உசிலை சிந்தனியா