செங்கம் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் .

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்,  மக்களவை, மாநிலங்களவையில் விவசாயிகள், தொழிலாளர்கள் பிரச்னைக் குறித்து விவாதிக்க உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்காமல் மசோதாக்களை நிறைவேற்றிய மத்திய அரசைக் கண்டித்து மாதிரி மக்கள் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது.மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் திருத்த சட்டம், மின்சார திருத்த சட்டம், மோட்டார் வாகன திருத்த சட்டம், பொதுதுறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கை, பெகாஸஸ் விவகாரம், புதுதில்லியில் விவசாயிகளின் தொடர் போராட்டம் ஆகியவை குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி அளிக்காமல் விவாதங்கள் இன்றி மசோதாக்களை நிறைவேற்றும் மத்திய அரசின் போக்கினை பொதுமக்களிடம் எடுத்து சென்று விளக்கிடும் வகையில் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற மக்கள் நாடாளுமன்றக் கூட்டத்திற்கு மாவட்ட விவசாய சங்க செயற்குழு ராஜா சபாநாயகராக செயல்பட்டார்.ஒன்றிய செயலாளர் சர்தார் மாவட்ட செயற்குழு மாதேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதத்தை தொடங்கி வைத்தார். வேளாண்துறை அமைச்சராக ஒன்றிய விவசாய சங்க செயலர் முத்துக்குமார் நியமிக்கப்பட்டார். இதில்,  வக்கீல் பாஷா ஏழுமலை குப்புசாமி ஜரினா மற்றும் கட்சி நிர்வாகிகள்  கோரிக்கைகளை விவாதித்தனர்.