
பல தனியார் வாகனங்களில் அரசு வாகனங்கள் போல G அல்லது அ எழுத்துடன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு சுற்றி வருகின்றன. சிலர் ஹியூமன் ரைட்ஸ், போலீஸ், ஆன் கவர்மெண்ட் டியூடி, ப்ரஸ், வழக்கறிஞர் என்ற ஸ்டிக்கர் அல்லது போர்டு வைத்து சொந்த வாகனங்களை இயக்கிவருகின்றனர் இதுபோன்று ஸ்டிக்கர் ஒட்டியிருப்பவர்கள் வாகனச் சோதனையின்போது போலிஸாருக்கு ஒத்துழைப்பதில்லை. எதற்கு வீண் பிரச்சனை என போலிஸாரும் விட்டுவிடுகின்றனர். ஆனால், இதுபோன்ற ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களின் மூலம் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. இதனால் அனைத்து வாகனங்களும் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடுமையாக உத்தரவு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தனியார் வாகனங்களிலும் கார்களிலும் கலர்கலராக நம்பர் பிலைட் ஓட்டுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் நெடுஞ்சாலைகளில் செல்லும் பொழுது காரி முன்புறம் ஒளி படுவதால் அதன் ஒளி எதிர் ஒலிப்பதால் விபத்துகள் ஏற்படுவதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றன இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தெரிவித்து வருகின்றனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.