
தென்காசி மாவட்டத்தில் புதிதாக “Beta Patrol” என்ற இரு சக்கர ரோந்து வாகனங்களை மாவட்ட எஸ்.பி கொடியசைத்து துவக்கி வைத்தார். தென்காசி மாவட்டத்திலுள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கும் விதமாகவும், குற்றச் செயல்கள் நடந்தால் விரைவாக சம்பவ இடத்திற்கு செல்லும் வண்ணம் மாவட்டத்தில் உள்ள 29 காவல் நிலையங்களுக்கும் ஒரு இருசக்கர ரோந்து வாகனம் (தென்காசி,குற்றாலம் 2 வாகனங்கள்) என்று மொத்தம் 31 இருசக்கர ரோந்து வாகனங்கள் (BETA PATROL) வழங்கப்பட்டு அதன் இயக்கத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS 25.08.21 புதன் கிழமை துவங்கி வைத்தார். மேலும் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு, தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக துண்டுப் பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன், காவல் ஆய்வாளர் பாலமுருகன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மார்டின், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.