தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்திய நபரை, குண்டர் சட்டத்தில் கைது செய்திட வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மதுரை செய்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் .

சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி தலைமை அலுவலகத்தின் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்திய நபரை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்திட வலியுறுத்தி, மதுரை செய்தியாளர்கள் சங்கம் சார்பில் அனைத்து நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மூத்த செய்தியாளரும் மதுரை பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் கதிரவன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தனியார் தொலைக்காட்சி தலைமை அலுவலகத்தின் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்திய, கோயம்புத்தூரை சேர்ந்த ராஜேஷ்குமாரை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திட வேண்டும்.பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.பத்திரிக்கையாளர் பாதுகாப்பை உறுதிசெய்ய, அவர்களுக்கென தனி சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மதுரை பத்திரிகையாளர் சங்க செயலாளர் ரமேஷ், பொருளாளர் சுப்பிரமணி , சத்தியம் தொலைக்காட்சி மதுரை நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனு மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் தாக்குதலில் ஈடுபட்ட நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் தமிழக முதல்வருக்கு தபால் அஞ்சல் மூலம் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்