Home செய்திகள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தாயார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் -தொல்.திருமாவளவன் பேட்டி .

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தாயார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் -தொல்.திருமாவளவன் பேட்டி .

by mohan

மதுரையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:அனைவரும் அர்ச்சகராகலாம் திட்டத்தை எதிர்த்து சுப்ரமணியசாமி வழக்கு தொடர்ந்துள்ளது குறித்த கேள்விக்கு:அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற பெரியாரின் கனவை தமிழக அரசு நினைவாக்கி உள்ளது. மனிதன் நிலவில் கால் வைத்தாலும் கோயில் கருவறைக்குள் கால்வைக்க முடியாது என்கிற நிலைமை ஆயிரம் தலைமுறைகளாக நீடித்து வந்தது. அதனால்தான் பெரியார் அனைவரும் கோவிலுக்குள் நுழைய வேண்டுமென்ற உரிமையினை கேட்டுக் கொண்டிருந்தார், அதனடிப்படையில் கலைஞர் அதனை சட்டம் ஆக்கினார் கலைஞரின் வழியில் ஸ்டாலின் நடைமுறைப் படுத்தியுள்ளார். இதனை விசிக பாராட்டி வரவேற்கிறது.சுப்பிரமணிய சுவாமியை போன்றவர்கள் சமூகநீதியை விரும்பாதவர்கள் அதனால்தான் இது அவர்களுக்கு எரிச்சலை தருகிறது. கோவிலுக்குள் இந்துக்கள் மட்டுமே போவார்களே தவிர இந்துக்கள் அல்லாதவர்கள் செல்லமாட்டார்கள் இதுவே அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதன் பொருள். இந்துக்கள் முன்னேறுவதில் இவர்களுக்கு என்ன சிக்கல். இந்துக்கள் அல்லாதவர்கள் அர்ச்சகர் ஆனால் இவர்கள் கோபப்படுவது ஆத்திரப்படுவது நியாயம் உண்டு, அனைத்து இந்துக்களும் கருவறைக்குள் நுழைவதால் இவர்கள் எரிச்சல்படுகிறார்கள் என்றால் அனைத்து இந்துக்களும் சமமானவர்கள் அல்ல என்பது இவர்களது நினைப்பை ஒப்புக் கொள்கிறார்கள் என்று அர்த்தம். அகில இந்திய அளவில் அகில இந்திய அளவில் இந்தத் திட்டம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்பட மாட்டோம் என்று ஸ்டாலின் கூறியுள்ளது பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது அவருக்கு உற்ற துணையாக இருப்போம்.தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் இலக்கிய செல்வன் குமரி ஆனந்தனின் துணைவியார் காலம் ஆகி இருக்கிறார் அவருக்கு விசிக சார்பாக அஞ்சலியை செலுத்துகிறோம் அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.நேற்று என் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் கூறிய அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், அரசியலுக்கு அப்பாற்பட்ட ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் நன்றி.கொடநாடு கொலை வழக்கில் மறு விசாரணை செய்யக்கூடாது என்று அதிமுக வெளிநடப்பு குறித்த கேள்விக்கு:அவர்கள் மீது குற்றம் இல்லை என்றால் அவர்கள் அச்சப்படத் தேவையில்லை, திமுக அரசு எத்தனை முறை புலனாய்வுக்கு உத்தர விட்டாலும் எங்களை அதில் ஈடுபடுத்த முடியாது என்று அதிமுகவினர் துணிச்சலோடு எதிர் கொள்ள வேண்டுமே தவிர வெளிநடப்பு செய்யக்கூடாது.ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கேள்விக்கு:சாதிவாரி கணக்கெடுப்பு என்பது அகில இந்திய அளவில் எடுக்க வேண்டும். எஸ்சி எஸ்டி பிரிவினருக்கான கணக்கெடுப்பு ஏற்கனவே நடைபெற்று கொண்டிருக்கிறது ஓபிசி காண கணக்கெடுப்பு இங்கு தேவைப்படுகிறது எம் பி சி யில் உள்ள 20 சதவீத இட ஒதுக்கீட்டில் பத்தரை சதவீதம் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டது பிற சமூகத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என்ற விவாதம் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறதுஎனவே பிற சமூகத்தினரின் சதவீதம் எவ்வளவு என்பதனை தெரிந்து கொள்வதற்காகத்தான் இங்கு சாதிவாரியான கணக்கெடுப்பு தேவைப்படுகிறது.சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை அரசு மேற்கொள்ளட்டும்.சாதி வாரியான இட ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு:இட ஒதுக்கீடு சாத்தியம் தான் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ள 50 சதவிகித உச்ச வரம்பை நீக்கி மத்திய அரசு அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரவேண்டும்.ஆப்கனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது குறித்த கேள்விக்கு:ஆப்கனில் சிக்கியுள்ள இந்தியர்களை போர்க்கால அடிப்படையில் விரைந்து மீட்க வேண்டும் என மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!