மதுரை ஆதினத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டேன் -தப்பியோடிய நித்யானந்தா முகநூலில் அறிவித்துள்ளதால் பரபரப்பு.

மதுரை ஆதினத்தின் 292வது ஆதினம் அருணகிரிநாதர் மறைந்த நிலையில் 293வது பீடாதிபதியாக தான் பதவியேற்றுகொண்டுள்ளதாகவும், இனி ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாகவும், இந்தியாவில் இருந்து தப்பியோடிய நித்தியானந்தா, முகநூலில் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடந்த 2012ஆம் ஆண்டு ஏற்கனவே அருணகிரிநாதரால் தான் இளைய ஆதினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.தான் ஆதினமாக பொறுப்பேற்ற நிலையில் கைலாசா நாட்டு ஆதின மட செயல்பாடுகளின் வழிகாட்டுதல் குறித்தும் 8ப க்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது..மதுரை ஆதினத்தின் 292வது சன்னிதானமான அருணகிரிநாதர் மறைவை அடுத்து கைலாசா நாட்டில் துக்கம் அனுசரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.293மதுரை ஆதினம் என கூறி தனக்கான பெயரை 293வது ஜெகத்குரு மஹா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் எனவும் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்