
மதுரை சோழவந்தான் அருகே கருப்பட்டி நடுத்தெருவை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் ரஞ்சித்குமார் 31. கூலித்தொழிலாளி இவர் , இன்று அதிகாலை வைகை ஆற்று அருகே உள்ள தோப்பில் காலைக் கடனை கழிக்கச் சென்றார். நேற்று இரவு பலத்த காற்றுடன் மழை பெய்திறந்த நிலையில், அங்கு உள்ள தோப்பில் தென்னை மரம் உயரழுத்த மின் வயரில் விழுந்து இருந்தது.இதனால், மின் வயர் அறுந்து கீழே கிடந்து உள்ளது இதை கவனிக்காமல், சென்ற ரஞ்சித்குமார் அறுந்து கிடந்த மின் வயர் மீது மிதித்துள்ளார். இதனால், ரஞ்சித்குமார் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதுகுறித்து, சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் விசாரணை செய்து வருகிறார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தார்…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.