சோழவந்தான் அருகே திருமால் நத்தம் கிராமத்தில் மயானத்தை விட்டு மாற்று இடத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்ய ஏற்பாடு:கிராம மக்கள் எதிர்ப்பு.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ,திருவேடகம் ஊராட்சிக்கு உட்பட்ட திருமால் நத்தம் கிராமத்தில் தனியார் சிலர் தங்களது இடத்தை பிளாட் போட்டு விற்பனை செய்துள்ளனர்.இந்த இடத்தில் அருகில் உள்ள ரிஷபம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த சிலர் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு குழி தோண்டி ஏற்பாடு செய்திருந்தனர். தகவலறிந்த, திருமால் நத்தம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறைக்கு புகார் கொடுத்தனர். இதன்பேரில், சோழவந்தான் போலீசார் சம்பந்தப்பட்டவர்களிடம், பிரச்சினை கொண்ட இடத்தில் பிணத்தை புதைக்க கூடாது என்று உத்தரவிட்டதாக தெரிகிறது.இதுகுறித்து, திருமால் நத்தம் கிராம பொதுமக்கள் கூறியதாவது:எங்கள் கிராமத்தில் உள்ள தனியார் இடத்தில் அருகில் உள்ள ரிஷபம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் சுடுகாடு ஏற்பாடு செய்துள்ளனர். இதனால், எங்கள் ஊராட்சி மன்றத் தலைவர் மூலம் வட்டாட்சியர் மற்றும் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளோம். இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முற்றுகை போராட்டம் செய்வோம் என்று தெரிவித்தனர்.இது இதுகுறித்து, ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் ஆறுமுகம் கூறியபோது: காலையில வந்து கிராமமக்கள் என்னிடம் நம்ம கிராமத்துல பட்டா இடத்தில் அருகிலுள்ள ரிஷபம் ஊராட்சியில் இறந்தவருடைய உடலை எரிப்பதற்கு, குழி தோண்டி உள்ளனர் என்று, கூறியதால் நான் சம்பந்தப்பட்ட இடத்தில் வந்து பார்த்துட்டு முறையா காவல்துறை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வருவாய் துறைக்கு தொலைபேசி மூலமாக தகவல் கொடுத்துள்ளேன். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டபோது, இது குறித்து எனக்கு தகவல் வந்தவுடன் வட்டாட்சியர்,வருவாய் ஆய்வாளர் ஆகியோர்களுக்கு தகவல் கொடுத்து முறையாக காவல் துறைக்கு தகவல் கொடுத்து அவர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்டவர்களிடம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு இல்லாத இடத்தில், பிணத்தை எரிக்க கூடாது என்று தெரிவித்ததாக கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..